செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified புதன், 23 நவம்பர் 2022 (18:13 IST)

திருநின்றவூர் தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிப்பு

School
சென்னை திருநின்றவூர் ஏஞ்சல்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் வினோத் என்பவர் அப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகார் எழுந்துள்ளது,

இந்த நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் வினோத்தை கைது செய்ய வலியுறுத்தி திடீரென 300க்கும் மேற்பட்ட இளைஞர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தினர். 

இது குறித்து போராடி வரும் மாணவ மாணவிகளிடம், காவல்துறையினர்  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில், பள்ளி தாளார் வினோத் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து பெற்றோரின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில்,  பள்ளி தாளாளர் மீதான பாலியல் புகரை அடுத்து, திருநின்றவூர் தனியார் பள்ளிக்கு  ஒருவாரத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  பள்ளியில் நடக்கும் பருவத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் இதுகுறித்த தேதி அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
Edited by Sinoj