திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 14 ஜனவரி 2023 (11:58 IST)

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

edappadi
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்துள்ளது 
 
கடந்த சில ஆண்டுகளாக ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே கொள்கை என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில் அதற்கு தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 
 
அந்த வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற வகையில் அனைத்து மாநிலங்களுக்குமான சட்டசபை தேர்தலை பாராளுமன்ற தேர்தலுடன் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இந்திய சட்ட ஆணையத்திற்கு இது குறித்து பதில் அளித்துள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran