வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (17:31 IST)

சென்னை ஐஐடியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை! 3 மாதங்களில் 4வது தற்கொலை..!

Chennai IIT
சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 3 தற்கொலைகள் நிகழ்ந்த நிலையில் நான்காவது தற்கொலை என்று நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை ஐஐடியில் பிடெக் இரண்டாம் ஆண்டு படிக்கும் கேதார் சுரேஷ் என்ற மாணவர் இன்று தற்கொலை செய்து கொண்டார். அவர் தான் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
தற்கொலைக்கு முன் எந்தவித கடிதமும் எழுதி வைக்கவில்லை என்பதால் அவரது தற்கொலைக்கு காரணம் என்ன என்பதை இதுவரை தெரியவில்லை. கடந்த மூன்று மாதத்தில் சென்னை ஐஐடியில் நிகழும் நான்காவது தற்கொலை சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னை ஐஐடியில் மாணவர்களை தற்கொலை அதிகரித்து வருவதை அடுத்து மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்
 
Edited by Mahendran