1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 4 செப்டம்பர் 2023 (14:23 IST)

ஆஸ்கர் விருது வாங்குவது முக்கியமில்லை- வெற்றிமாறன்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன் ஆஸ்கர் விருது வாங்குவது முக்கியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில், பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை,  விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கியதுடன், விசாரணை என்ற படத்தைத் தயாரித்தவர் வெற்றிமாறன்.

இவர் சமீபத்தில் இயக்கி தியேட்டரில் ரிலீசான விடுதலை படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், சென்னையில், தக்சின் மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநி திஸ்டாலின், வெற்றிமாறன், ரிசப்ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த  நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன், கலைக்கு மொழி, கலாச்சாரம் எல்லைகள் இல்லை என்று கூறுவ்ர்., ஆனால், கலைக்கு மொழி கலாச்சாரம் எல்லைகள் உள்ளது. கலை அதன் எல்லைக்குள் இருந்து இயங்கும்போது அது கடந்துபோகும் என்று கூறினார்.

கொரொனா  ஊரடங்கில் எல்லோரும் வீட்டில் இருந்தோம். பல சினிமாக்கள் பார்க்க நேரம் கிடைத்தது.   ஊரடங்கிற்குப் பின் தியேட்டருக்கு மீண்டும் சென்றோம், கே.ஜிஎஃப், ஆர்.ஆர்.ஆர், காந்தாரா படங்களில் மக்களுக்காக எடுக்கப்பட்டதால் வெற்றி பெற்றது. அவர்களின் கலாச்சாரத்தில் எடுக்கப்பட்ட படம். நம் கதைகளைச் சொல்லுகிறோம். அதனால் ஆஸ்கர் வாங்குவது முக்கியமிலை என்று கூறியுள்ளார்.