ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் தான்; தமிழக பாஜக கருத்து!
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறிவரும் நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் தான் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வரும் நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் தான் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
இந்தியா குடியரசு ஆன பின்னர் நான்கு முறை நாடாளுமன்ற தேர்தலுடன் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்துள்ளது என்றும் அதன் பிறகு சில மாநில அரசு கலைக்கப்பட்டதால் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை வழி தவறி போனது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்றும் ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்காளர் பட்டியல் மாற்றம், அரசியல் முறைகேடுகளை நீக்க வேண்டும் எனில் இந்த முறை தான் சாத்தியம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Edited by Siva