திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 29 அக்டோபர் 2022 (16:18 IST)

தீபாவளி பண்டிகையொட்டி ஆவின் இனிப்புகள் ரூ.116 கோடிக்கு விற்பனை!

aavin
தமிழகத்தில்  நிறுவனம் மூலம் தீபாவளி பண்டிக்கைக்கு ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அதிக மக்கள் விரும்பி வாங்கக் கூடிய பொருட்களாக தமிழ அரசின் ஆவின் பால் நிறுவன பொருட்கள்  உள்ளன.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் சுமார் 4.5 லட்சம் கிராமப்புற பால் உற்பத்தியாளார்களிடம் இருந்து கொள்முதல் செய்த மூலம் மூலம் ஆவின் நிறுவனப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு  ஆவின்  நிறுவனம் சார்பில் ஏற்கனவே உள்ள 275 வகை  இனிப்புகளுடன் புதிதாக 9 வகை இனிப்பு பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

எனவே, இந்த ஆண்டு ரூ.200 கோடிக்கு ஆவின் பொருட்கள்  விற்பனை இலக்கு  நிர்ணயிக்கப்பட்ட நிலையில் , ரூ.116 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

கடந்தாண்டு ரூ.82.கோடியே 24 லட்சத்திற்கு ஆவின் இனிப்புப் பொருட்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj