வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 6 நவம்பர் 2021 (08:42 IST)

அரசுக்கு தீபாவளி வசூலை அள்ளிக்கொடுத்த ஆவின்!!

இந்த ஆண்டு 83 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தனது சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டார். 
 
இந்த ஆண்டு தீபாவளி விடுமுறையாக 4 நாட்கள் தொடர் விடுமுறை ஆனதை அடுத்து தீபாவளி கொண்டாட்டம் தமிழகத்தில கலைக்கட்டுகிறது. பட்டாசுகளை வெடித்தும் சொந்தபந்தங்களுடன் இனிப்புகளை பகிர்ந்துக்கொண்டும் ஊர் சுற்றியும் மக்கள் விடுமுறை நாட்களை கழித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் கடந்த தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் 55 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 83 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தனது சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டார். 
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு வழங்கும் இனிப்புகளை ஆவின் நிறுவனத்தில்தான் கொள்முதல் செய்யவேண்டும் என அறிவுறுத்தியதை அடுத்து இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு ஆவின் இனிப்புவகைகள் விற்பனையில் சாதனைப் படைத்துள்ளது.