Daily Horoscope
✕

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த ஓபிஎஸ்!.. அடுத்தடுத்த அதிரடி...

Written By Mahendran
Updated: வெள்ளி, 27 பிப்ரவரி 2026 (12:53 IST)
அதிமுகவில் மூன்று முறை முதல்வராக இருந்து, எடப்பாடி பழனிச்சாமியால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம். பாஜகவின் உதவியுடன் மீண்டும் அதிமுகவில் இணைய பல முயற்சிகளையும் ஒபிஎஸ் எடுத்தார். அதேபோல் தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய முயற்சி செய்தார்.

ஆனால் இது எதுவுமே நடக்கவில்லை. ஏனெனில் கட்சிக்குள்ளும், கூட்டணிக்குள்ளும் பன்னீர்செல்வம் வரக் கூடாது என்பதில் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருக்கிறார்..

இந்த கோபத்தில்தான் இன்று காலை அறிவாலயம் சென்ற பன்னீர்செல்வம் திமுக தலைவர் மற்றும் ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அதன்பின் செய்திகளிடம் பேசிய போது ‘தளபதி மு.க ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறார்.. அடுத்தும் திமுக ஆட்சிதான்.. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை தவறாக வழிநடத்தி செல்கிறார்.. ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார்.. தளபதி வாய்ப்பு கொடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன்’ என்று பேட்டி கொடுத்தார்..

அதன்பின் தலைமைச் செயலகம் சென்று தலைமைச் செயலரிடம் தனது ராஜினாமா கடிதத்தையும் பன்னீர்செல்வம் கொடுத்தார். அவருடன் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் சேகர் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments