புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 12 மே 2022 (22:06 IST)

செவிலியர் தினம்:செவிலியர்கள் கேக் வெட்டி உற்சாக கொண்டாட்டம்...

செவிலியர் தினத்தை ஒட்டி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கேக் வெட்டி உற்சாக கொண்டாட்டம்...
 
பிளாரன்ஸ் நைட்டிங்கேள் அம்மையாரின் பிறந்த தினத்தை ஆண்டுதோறும் செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இன்று செவிலியர் தின விழாவை ஒட்டி சேலம் அரசு மருத்துவமனையில் பிளாரன்ஸ் நைட்டிங்கேள் திருஉருவ சிலைக்கு  செவிலியர்கள் இன்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தொடர்ந்து,கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்து கொண்டதோடு தன்னலமற்ற சேவை செய்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு செவிலியர்கள் தினத்தை கொண்டாடினர்.