வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 7 ஜூலை 2021 (21:25 IST)

செல்ல நாயின் பிறந்தநாளை கொண்டாடிய விஜய் பட இயக்குநர்…

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் அட்லீ.இவர் இதுவரை ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இதையடுத்து, பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானிடம் அட்லீ கதை சொல்லி உள்ளதாகவும் இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் ஷாருக்கான் - அட்லீ இணையும் அடுத்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மேலும், தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற படத்தில் ஷாருக்கான் நடித்து வருவதால் இப்படப்பிடிப்பு முடிந்த பின் அட்லி – ஷாருக்கான் இணையும் பட ஷூட்டிங் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் ஷாருக்கான் 2 கெட்டப்பில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குநர் அட்லி- பிரியா அட்லீ            தம்பதியர் தங்களது வீட்டில் செல்ல நாய்க்குட்டி வளர்த்து வருகின்றனர். இதன் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர்.

இன்று அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ இருவரும் தங்கள் செல்ல நாய்க்குட்டியின் 5 வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்களை பிரியா அட்லீ தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. மேலும் இதை ரசிகர்கள் பரவலாக்கி வருகின்றனர்.