பிறந்தநாள் கொண்டாடிய கிருத்திகா உதயநிதி!

sinoj| Last Modified செவ்வாய், 29 ஜூன் 2021 (23:53 IST)


இயக்குநர் கிருத்திகா உதயநிதி தனது படக்குழுவினருடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதியின் மனைவி கிருத்திகா. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உள்ளார். இவர் வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இவர் அடுத்து இளம் நடிகர் காளிதாஸ் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.


நெட்பிளிக்ஸில் வெளியான ஆந்தாலஜி படத்தில் ஒரு பகுதியான தங்கம் என்ற வெப் தொடரில் மிகத்திறமையாக நடித்திருந்தார் காளிதாஸ்.


இந்நிலையில் கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ள படத்தில் காளிதாஸுக்கு ஜோடியாக தான்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இப்படத்தை ரைஸ் ஈஸ்ட் கிரியேசன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கிருத்திகா உதயநிதி இன்று தனது பிறந்தநாளை காளிதாஸ் ஜெயராம், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட படகுழுவினருடன் இணைந்து கொண்டாடினார்.

இந்தப் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.




இதில் மேலும் படிக்கவும் :