Daily Horoscope
✕

வந்தான் ஒருவன் வந்தான்! – தேர்தலுக்காக ட்ரெண்ட் செய்யும் தம்பிகள்!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (14:37 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியினர் #வந்தான்_ஒருவன்_வந்தான் என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியுள்ளன. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே 36 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விருப்பமனு முறையில்லாமல் நேரடியாக அறிவித்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இந்நிலையில் சமீபத்தில் கட்சிக்குள் நடந்த உள்பூசல் காரணமாக கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனால் நாதக தேர்தலில் பின்னடைவை சந்திக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், நாம் தமிழர் கட்சியினர் #வந்தான்_ஒருவன்_வந்தான் என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதன்மூலமாக சீமான் கட்சி அரசியல் முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

எல்லாம் காட்டு

எம்.ஜி.ஆரின் வரலாற்றையே மாற்றிய விஜய்!.. தாராபுரத்தில் விசில் சின்னம் செய்த சாதனை..

நினைத்ததை முடிப்பவர்.. நாளை நமதே.. வரலாறும் நமதே!.. சிபி சக்ரவர்த்தி டிவிட்!..

2 தொகுதிகளிலும் வெற்றி.. தவெகவுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள்!..

இது மக்களுக்கு கிடைத்த வெற்றி!. மிருக குண பேச்சுக்கு மக்கள் கொடுத்த பதிலடி!.. முதல்வர் விஜய் பதிவு!..

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? சில புதிய விதிமுறைகள் அமல்..

அடுத்த கட்டுரையில்
Show comments