திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 ஜனவரி 2025 (12:10 IST)

ஈரோடு இடைத்தேர்தலில் விலகிய பாஜக, அதிமுக! - திமுகவுடன் நேரடியாக மோதும் நாம் தமிழர்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முக்கிய மாநில கட்சிகள் பலவும் விலகிய நிலையிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிட வேட்பாளரை அறிவித்துள்ளது.

 

 

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் சில மாதங்களுக்கு முன்னதாக காலமான நிலையில் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் போட்டியிடாமல் நேரடியாக திமுகவே போட்டியிடுகிறது.

 

இந்நிலையில் பெரும்பாலும் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றி பெறுவதாலும், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருப்பதாலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நேர, பண விரயம் செய்ய பிற கட்சிகள் யோசிப்பதாக கூறப்பட்டது. 
 

 

அதை தொடர்ந்து அதிமுக, பாஜக உள்ளிட்ட பல முக்கிய மாநில கட்சிகளும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்தன. ஆனால் நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. இதனால் இதுவரை இல்லாதபடி முதல்முறையாக திமுக - நாதக என்ற மோதல் தேர்தலில் எழுந்துள்ளது.

 

சமீபமாக சீமானின் பெரியார் சர்ச்சையும் ஈரோடு கிழக்கு தேர்தலை மையப்படுத்தியே அமைந்திருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது. ஆளும் கட்சியான திமுகவை எதிர்த்து நாதக வாக்கு வங்கியில் பலம் பெறுமா? அல்லது டெபாசிட் இழக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K