வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (10:37 IST)

திராவிட-க்கு பதிலாக தமிழர் என சேர்த்த தமிழ் தேசியர்கள்! வைரலாகும் புதிய தமிழ்த்தாய் வாழ்த்து!

DMK vs NTK

சமீபத்தில் ஆளுநர் கலந்து கொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிட நல் திருநாடும்’ என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மத்திய அரசின் பொதுத்துறை ஒளிபரப்பு சேனலான டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி தின விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அதில் இடம்பெற்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ‘திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகள் மட்டும் நீக்கம் செய்து பாடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அரசியலை தமிழ்த்தாய் வாழ்த்திலும் காட்டுவதாக, அதில் கூட திராவிடத்தை புறக்கணிப்பதாக திமுக மற்றும் தோழமை கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் #திராவிடநல்திருநாடு என்ற ஹேஷ்டேகையும் பலர் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
 

 

இந்நிலையில் திராவிடம் என்னும் கருத்தாக்கத்தை மறுத்து வரும் நாம் தமிழர் கட்சியினரும், பிற தமிழ் தேசியவாதிகளும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் இருந்து ‘திராவிட’ என்ற வார்த்தையை நீக்கி ‘தமிழர்’ என்ற வார்த்தையை சேர்த்து புதிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ‘தமிழர் நல் திருநாடும்’ என்ற போஸ்டரையும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K