Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நிறுத்தப்படுகிறதா? தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு

Written By Mahendran
Updated: திங்கள், 20 பிப்ரவரி 2023 (17:05 IST)
ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்த இதுவரை எந்தவிதமான புகார் வரவில்லை என்றும் எனவே தேர்தலை நிறுத்தும் பேச்சுக்கு இடமில்லை என்றும் தமிழக தேர்தல் ஆணையர்  சத்யபிரத சாகு அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்தார். தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார்கள் அனுப்பலாம் என்றும் இதுவரை பெறப்பட்டுள்ள புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 
 
மேலும் ஈரோடு கிழக்கில் சட்டம் ஒழுங்கு சுமுகனான முறையில் உள்ளது என்றும் ஒரு சில புகார்கள் வந்தாலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என்று இதுவரை எந்தவித புகார் என்னிடம் வரவில்லை என்றும் கொடுக்கப்பட்ட புகார்கள் அனைத்துக்கும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
 
 எனவே ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

அறப்போர் இயக்கம் கொடுத்த டெண்டர் புகார்.. உடனடியாக விசாரணை செய்கிறது தவெக அரசு...

2027-ல் எல் நினோ சம்பவம் பண்ணும்!.. கடுமையான வெயில் இருக்கும்!.. எச்சரிக்கை!...

ஃபிரிட்ஜ் வெடித்து குடும்பமே பலி!.. 4 பேர் உயிரிழந்த சோகம்!...

ஆ ராசா, சேகர்பாபுவை அடுத்து இன்னொரு திமுக பிரபலம் மீதும் வழக்கு.. தவெக அரசு அதிரடி...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு.. எம்டிசி பேருந்து ஓட்டுநர் பரிதாப பலி..

அடுத்த கட்டுரையில்
Show comments