ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (09:02 IST)

பொங்கல் விடுமுறை - இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் இல்லை!!

இன்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டார்.

 
அப்போது பேசிய அவர், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 21,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றின் தன்மை அறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறினார். மேலும் பொங்கல் பண்டிகை வருவதால் இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் இல்லை. மெகா தடுப்பூசி முகாம் இல்லாவிட்டாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு எந்த தடையும் இல்லை என கூறியுள்ளார். 
 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கடந்த செப்டம்பர் மாதம் முதலாக தமிழக அரசு கொரோனா தடுப்பூசி முகாமை வாரம்தோறும் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.