திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 27 ஜூலை 2022 (16:13 IST)

திமுக ஆட்சியில் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை- கிருஷ்ணசாமி

krishnasamy
திமுக ஆட்சியில் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட எந்த வாக்குறுதியும்  நிறைவேற்றப்படவில்லை என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலுக்கு முன்,திமுக கட்சி பல்வேறு வாக்குறுதிகள் அளித்தது.  ஆட்சிப் பொறுப்பேற்று 15 மாதங்கள் ஆகியும் எந்த ஒரு முக்கிய வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை எனத் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

திமுக ஆட்சியில் மின்கட்டணம் அதிகரித்துள்ளது. பட்டாசு தொழில் முடங்கி  லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர் அரசு  நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். மாண்வர்களை மன அழுத்தத்தில் இருந்து மீட்டு, அவர்களை தற்கொலையை தடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.