1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 27 ஜூலை 2022 (15:16 IST)

உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

stalin
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர் கபடி விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது உயிரிழந்த நிலையில் அவருக்கு தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிதியுதவி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 
இதுகுறித்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மதுரா மானடிகுப்பம் கிராம, தெற்கு தெருவில் மைதானத்தில்  ஜூன் 24-ஆம் தேதி அன்று மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றது 
 
இந்த கபடி போட்டியில் பங்கேற்ற புறங்கனி கிராமத்தை சேர்ந்த சஞ்சய் என்ற இளைஞர் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன்
 
உயிரிழந்தவரின் பெற்றோருக்கும் அவரது சகோதரிக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்