1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2017 (06:07 IST)

அனிதாவை விட அதிக மதிப்பெண் எடுத்த மாணவரின் அவல நிலை

1176 மதிப்பெண் எடுத்து மருத்துவ கனவுகளுடன் இருந்த அனிதா, நீட் தேர்வு காரணமாக தனக்கு மெடிக்கல் சீட் கிடைக்காததால் தனது உயிரையே மாய்த்து கொண்டார். இந்த நிலையில் அனிதாவை விட கூடுதல் மதிப்பெண் பெற்ற ஒரு மாணவர் இதே நீட் காரணமாக மெடிக்கல் சீட் கிடைக்காததால் கைத்தறி நெசவு தொழிலை கவனித்து வருகிறார்



 
 
12ஆம் வகுப்பு தேர்வில் 1190 மதிப்பெண்கள் பெற்று கட்ஆப் 199.50 பெற்றும் நீட் தேர்வில் 700க்கு 200 மதிப்பெண் பெற்றதால் தனது மருத்துவக் கனவை கிழித்துவிட்டு அம்மாவுடன் விசைத்தறி நெசவுசெய்யும் மாணவர் ரஜினிரகு என்பவர்.
 
இவர் போன்று இன்னும் நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் தகுதியிருந்தும் விரும்பிய படிப்பு படிக்க முடியாத நிலையில் உள்ளதால் அரசியல் கட்சிகள் தங்களையே இருக்கும் கருத்துவேறுபாடுகளை உடனே ஒதுக்கி தள்ளிவிட்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.