வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 2 செப்டம்பர் 2017 (21:32 IST)

ஸ்டாலின் அஞ்சலிக்கு பின் அனிதா உடல் நல்லடக்கம்

நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்த நிலையில் தற்கொலை செய்துக்கொண்ட அரியலூர் அனிதாவின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின்னர் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


 

 
தமிழக அரசின் மாநில 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துக்கொண்டார். அனிதாவின் தற்கொலை தமிழகம் முழுவது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
 
மாநில அரசு நீட் தேர்வில் விலக்கு பெற முடியாத நிலையில் மத்திய அரசிடம் கைக்கட்டி நிற்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வால் அனிதாவின் தற்கொலை நீட் தேர்வு முழுக்கு போட ஒரு திரியாக மாறியுள்ளது. இந்த திரி பற்றிக்கொண்டால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியும்.
 
அனிதாவில் உடலுக்கு அரசியல் தலைவர்கள மற்றும் பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இரவு 10 மணிக்கு வந்து அஞ்சலி செலுத்துவார் என்றும் அவரது வருகைக்கு பின்னரே உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.