1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 15 மே 2019 (11:17 IST)

எந்தவொரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது - பிரதமர் மோடி பதிலடி

“எந்தவொரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது” என்று கமலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார் மோடி.
”சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்று கமல் பேசியதையடுத்து, ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி “எந்தவொரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது” என்று பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
 
சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்று பேசியது அரசியல்தளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 
அவர் பேசியது கண்டனத்துக்குறியது என்று பாஜக தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா மற்றும் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி “எந்தவொரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. அப்படி தீவிரவாதியாக இருப்பவர்கள் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது. உலகம் ஒரே குடும்பம் என்பதே இந்து தர்மத்தின் ஆழமான கருத்து” என்று பதிலளித்துள்ளார்.
 
மேலும், கமலஹாசன் மீதான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.