ஜி.எஸ்.டி. வரி திரும்பப் பெற கமிஷன் தர வேண்டாம்: கரூர் பா.ஜ., நகர தலைவர் வேண்டுகோள்
'ஜி.எஸ்.டி., வரியை திரும்பப் பெற, இடைத் தரகர்களிடம் கமிஷன் கொடுக்க வேண்டாம்' என, கரூர் பா.ஜ., நகர தலைவர் ரா.செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தபோது, கரூர் நகரில், ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் பல உள்ளன. ஏற்றுமதியாளர்கள் வாங்கும் நூல், துணி, பேக்கிங் பொருட்களுக்கு, 5 முதல், 18 சதவீதம் வரை, ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது. வரி செலுத்தி பின்னர் ரிட்டன் எடுத்து வருகின்றனர். இந்த ரிட்டன், ஏற்றுமதியாளர்களுக்கு திரும்ப கிடைத்து வருகிறது. ஆனால் இதைபெறுவதற்கு கமிஷன் கொடுக்க வேண்டி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர், ஜவுளி அமைச்சர், பிரதமர் ஆகியோருடைய ஆப்களில், புகார் பதிவு செய்யப்பட்டது. இதன்படி, நடவடிக்கை எடுக்கப்படும் என, திருச்சி கோட்ட ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், யாரும் யாருக்கும் இதற்காக கமிஷன், லஞ்சம் கொடுக்க வேண்டாம். அப்படி வாங்கும் அதிகாரி மீது புகார் தந்தால், உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்துள்ளார். எனவே, கரூர் ஏற்றுமதியாளர்கள் யாரும், வரி திரும்பப் பெற, கமிஷனோ லஞ்சமோ கொடுக்க வேண்டாம். 15 நாட்களுக்குள் அவரவர் வங்கி கணக்கில், வரவு வைக்கப்பட்டு வருகிறது என்றும் அவ்வாறு இல்லாமல், யாராவது வரி திரும்ப பெற கமிஷன் கேட்டால் ஜி.எஸ்.டி அதிகாரிகளிடம், என்னிடமோ (கரூர் நகர பா.ஜ.க தலைவர் ரா.செல்வன்) புகார் தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வீடியோவை காண
சி.ஆனந்தகுமார்