1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (14:28 IST)

ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஆண்ட்ரியா

ஸ்ரீரெட்டி வெளிப்படையாக கூறுவது சரிதான் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பிரபல முன்னணி நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

 
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பிரபல இயக்குநர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தெலுங்கு திரையுலகை அதிரவிட்டார். அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதும் குற்றச்சாட்டை வைத்தார்.
 
இவரது குற்றச்சாட்டு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையை சேர்ந்த பலரும் இவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில் பிரபல முன்னணி நடிகை ஆண்ட்ரியா ஸ்ரீரெட்டிக்கு ஆரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
ஸ்ரீரெட்டி சொல்வது உண்மை என்றால் இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைக்க வலிமையான இதயம் வேண்டும். நான் இதுபோன்று எதுவும் சந்தித்ததில்லை. இவர் சந்தித்ததாக வெளிப்படையாக கூறுவது சரிதான். இதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.