பேருந்தை புரட்டு போட்ட நிவர்: ஆந்திராவில் செக்கெண்ட் இன்னிங்ஸ்!!
நிவர் புயல் ஆந்திரப்பிரதேசம் நோக்கி சென்று கொண்டிருப்பதால் அங்கு மக்கள் கவனமுடன் இருக்க எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக தமிழகம் மற்றும் புதுவை மக்களை பயமுறுத்தி கொண்டிருந்த நிவர் புயல் இன்று அதிகாலை 2 மணிக்கு முழுவதுமாக கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்க 4 முதல் 5 மணி நேரம் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.
தற்போது இந்த புயல் ஆந்திரப்பிரதேசம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடந்தபோதிலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
குறிப்பாக வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆந்திராவை நோக்கி புயல் சென்றுக்கொண்டிருப்பதால் அங்கு காற்றின் வேகம் அதிகமாகவுள்ளது. தெல்லூர் மாவட்டத்தில் இருந்து சித்தூர் சென்றுக்கொண்டிருந்து பேருந்து ஒன்று காற்றால் சாலையின் ஓரம் வீசப்பட்டது. இது போல சில வாகனங்களும் சிரமத்தை சந்தித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் வாகனங்களை இயக்க வேண்டாம் என ஆந்திர அரசு அறிவுறுத்தியுள்ளது.