திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 25 நவம்பர் 2020 (16:50 IST)

சென்னையில் திரையரங்குகள் மூடல் – மீண்டும் திறப்பது எப்போது?

நிவர் புயல் காரணமாக சென்னையில் உள்ள திரையரங்குகள் எல்லாம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் அருகே வங்கக்கடலின் தெற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியுள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறி நாளை பிற்பகல் மாமல்லப்புரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனால் காலையில் இருந்து சென்னை மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் எல்லாம் மழைப் பெயது வருகிறது. இந்நிலையில் பலத்த காற்று மற்றும் மழைக் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை குறையும் அளவைப் பொறுத்து திறக்கும் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.