1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 11 டிசம்பர் 2019 (11:03 IST)

நாய்க்கும்.. பூனைக்கும்.. சிட்டிஷன்ஷிப்; அடேய் நித்தி ஓவாரா தான் போய்க்கிட்டு இருக்க...

கைலாசா என்பது எல்லைகளற்ற ஆன்மிக பெருவெளி என போலீஸுக்கு தண்ணி காட்டி வரும் நித்தியானந்தா வீடியோ வெளியிட்டுள்ளார். 
 
நித்தியானந்தாவை 12 ஆம் தேதிக்குள் பிடிக்க வேண்டும் என கர்நாடக காவல்துறைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கெடு விதித்திருக்கும் நிலையில், அவர் கேஷ்வலாக யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் சமீபத்திய வீடியோவில் செல்லபிராணிகளும் கைலாசாவிற்கு வரலாம் என கூறியுள்ளார். 
 
அந்த வீடியோவில் நித்தியானந்தா முழுமையாக பேசியிருப்பதாவது, எனது சீசர்கள் என்னை நினைத்து பரணி தீபம் கையில் ஏந்தியபடி ஆசிரமத்தை சுற்றி வருகின்றனர். உண்மையான கைலாசத்தை நான் உருவாக்குகிறேன். எனது உடலை பயன்படுத்தி பரமசிவன் இவ்வுலகில் கைலாசத்தை உருவாக்குகிறார். 
 
இ-ஸ்ரீகைலாசா திட்டத்தை துவங்குவோம். இது ஒரு நாட்டின் குடியுரிமை அல்ல. கைலாசா என்பது எல்லைகளற்ற ஆன்மிக பெருவெளி. கைலாசா மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நீங்கள் உங்கள் செல்லப்பிராணிகளையும் கைலாசாவில் இணைக்கலாம். அவற்றுக்கு சிறப்பு பரிசுகளும் காத்திருக்கின்றன. 
 
ஒருவரை தாக்குபவர்கள் சரித்திரம் படைக்க மாட்டார்கள். தாக்குதலை எதிர்க்கொள்பவர்கள்தான் வரலாறு படைப்பார். முட்டாள்கள் தான் ஒருவரை தாக்குவார்கள். நாந்தான் மனிதத்தின் எதிகாலம் என பேசியுள்ளார்.