1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 11 டிசம்பர் 2019 (07:36 IST)

முக ஸ்டாலினுக்கும் ஒரு தீவு: நித்தியானந்தா அறிவிப்பால் பரபரப்பு

வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று முக ஸ்டாலின் முதல்வராவார் என்று நேற்று நித்தியானந்தா வெளியிட்ட வீடியோ ஒன்றில் பரபரப்பாக தெரிவித்துள்ளார் 
 
இந்திய போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டதாக கூறப்படும் நிலையில் அவர் அவ்வப்போது ஒரு சில வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்
 
கைலாஷ் என்ற ஒரு புதிய நாட்டை உருவாக்கியதாகவும் அதில் குடியுரிமை பெற விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் நித்தியானந்தா கூறியிருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவரது நாட்டில் குடியுரிமை பெற 10 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்ததாக கூறப்பட்ட போதிலும் அவர் கூறிய கைலாஷ் நாடு இருப்பதாக கூறப்படும் ஈக்வடார் நாட்டின் அரசு நித்தியானந்தாவிற்கு எந்த தீவையும் தாங்கள் விற்கவில்லை என்றும் அவருக்கு அடைக்கலம் கொடுக்கவும் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் நேற்று நித்தியானந்தா வெளியிட்ட ஒரு வீடியோவில், ‘தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று முக ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றும், அவருக்கு மீனாட்சியின் அருள் இருப்பதால் அவர் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்
 
அவ்வாறு 2021 ஆம் ஆண்டு முக ஸ்டாலின் முதல்வர் ஆனதும் அவருக்கு கைலாஷ் நாட்டின் அருகிலேயே ஒரு தீவை தான் பரிசாக அளிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது