Daily Horoscope
✕

நிறைய கடன் இருக்கு!.. அவமானம்.. அதான் கொள்ளையடிச்சேன்.. நிஷாந்த் வாக்குமூலம்...

Updated: சனி, 21 நவம்பர் 2026 (15:13 IST)
சில நாட்களுக்கு முன்பு மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் நிஷாந்த் என்கிற வாலிபர் 11.3 கிலோ நகையை தனியாக சென்று கொள்ளையடித்து சென்றார். போலீசாரின் விசாரணையில் நிஷாந்துக்கு அவரின் தந்தையும், மதுரையை சேர்ந்த யுடியூபர் மற்றும் இன்ஃப்ளூயன்சர் மீனாட்சியும் உதவியதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து மதுரை மீனாட்சி மற்றும் நிசாந்தின் தந்தை இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 5 கிலோ நகைகள் மீட்கப்பட்டது. போலீசாரிடமிருந்து தப்பிக்க நினைத்த நிசாந்த பல ஊர்களுக்கும் சென்று தலைமுறைவானதால் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஒருவழியாக பெங்களூரிலிருந்து சேலத்திற்கு ஆம்னி பேருந்தில் வந்த போது தர்மபுரியில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், போலீசாரிடம் நிஷாந்த் அளித்த வாக்குமூலத்தில் ‘கடன் தொல்லையால் பல இடங்களில் அவமானப்பட்டேன். என்னால் என் தந்தைக்கு 30 லட்சம் ரூபாய் கடன்.. அதை அடைக்க எனது வருமானம் பத்தவில்லை.. தந்தையின் ஆட்டோ வருமானமும் போதவில்லை.. அதேபோல், தோழி மீனாட்சிக்கும் வீடு கட்டுவதில் பணத்தேவை இருந்தது.. அதனால்தான் கொள்ளையடிக்க திட்டமிட்டேன்’ என வாக்குமூலம் அளித்திருக்கிறார்..
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

இந்தியாவை ஃபாலோ பண்ணா அமெரிக்கா பொருளாதாரம் உயரும் - டிரம்ப் பேச்சு

குழந்தைக்கு செலுத்தும் ரூ.9 கோடி மருந்து வெறும் ரூ.2.5 லட்சம்!.. இந்திய மருத்துவர் கண்டுபிடிப்பு!....

7 மாதங்களுக்கு பின் உயர்ந்த இந்திய ரூபாய் மதிப்பு...

இன்ஸ்டா வாக்கிதா கொடுத்த புகார்!.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு...

கல்யாணம் முடிஞ்சி அடுத்த நாளே பிரசவம்!.. புது மாப்பிள்ளைக்கு ஷாக் கொடுத்த பெண்...

அடுத்த கட்டுரையில்
Show comments