வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2024 (13:54 IST)

மினி காஷ்மீராக மாறிய நீலகிரி.! உறைபனியால் மக்கள் அவதி.!!

frost
உதகையில் கொட்டிய உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, குறைந்த பட்ச வெப்பநிலையாக 0 டிகிரி செல்சியஸ் பதிவானதால் மலை பிரதேசம் மினி காஷ்மீர் போல் காட்சியளித்தது.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை பனிக்காலம் இருக்கும். குறிப்பாக நவம்பர் மாதம் துவக்கத்தில் நீர் பனி ஆரம்பித்து படிபடியாக உறைபனி பொழிவு ஏற்படும். ஆனால் இந்த ஆண்டு தொடர் மழை காரணாத்தால் பனிபொழிவு தாமதமாக  துவங்கிது. இதனால் பகல் நேரங்களில் கடும் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிரும் நிலவுகிறது. 
 
people suffer
இந்த நிலையில் உதகை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடும் உறைபனி படிந்து காணபடுகிறது. உறைபனி காரணமாக உதகை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் புல்வெளிகள் மீது இருக்கும் நீர் துளிகள் உறைந்து பனி கட்டிகளாக காணபட்டது. 

 
குறிப்பாக உதகை நகர், தலைகுந்தா , HPF, காந்தள் , பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி புள்வெளிகளில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போலவும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீது முழுவதுமாக மூடிய நிலையில் காணப்பட்டது. இதனால் உதகையில் பல பகுதிகள் மினி காஷ்மீர் போல காட்சியளித்தது. இன்று காலை உதகையில் கடுங்குளிர் நிலவியது.  இனி வரும் நாட்களில் பனி பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. குறிப்பாக தலைகுந்தா பகுதியில் இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலையாக 0 டிகிரி பதிவாகி உள்ளது.