ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 18 ஜனவரி 2024 (10:20 IST)

அமெரிக்கா ஆர்டிக் பகுதியில் பனி வெடிப்பு.! கோடிக்கணக்கான மக்கள் தவிப்பு..!!

snow
ஆர்டிக் பனி வெடிப்பு காரணமாக அமெரிக்காவில் பெரும்பாலான மாகாணங்களில் வரலாறு காணாத வகையில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
 
அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவால் அங்குள்ள மக்களின் இயல்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் பல மாகாணங்களில் உள்ள நகரங்கள் உறைந்து போய் உள்ளன.   இதனால் சுமார் 14 கோடிக்கு மேற்பட்ட மக்கள் கடும் குளிரால் தவித்து வருகின்றனர். மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
மக்கள் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும், அத்தியாவசிய  பயணம் மேற்கொள்வோர் பாதுகாப்புடன் பயணத்தை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடும் பனிப்பொழிவால் விமான சேவையும் முடங்கியுள்ளது. மேலும் வெப்பநிலை மைனஸ் 30 டிகிரி அளவுக்கு குறையும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.