ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (18:10 IST)

நீலகிரியில் வெளுக்கும் மழை: விரையும் தேசிய பேரிடர் குழு !!

பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என ஆர் பி உதயகுமார் தெரிவித்தார். 

 
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தவர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த வருடம் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கி பெய்து வரும் நிலையில்  தமிழகத்தில் இதுவரை சராசரியாக 203 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 
 
இது தென்மேற்கு பருவ மழை சராசரியை விட 41% குறைவு. நீலகிரி கோயமுத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 
 
பில்லூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் அணையின் பாதுகாப்பு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரப் பகுதி மக்கள் ஆடு மாடு குளிப்பாட்டுவதற்கு, குளிப்பதற்கும் செல்லக் கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 
 
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வந்தாலும் நீலகிரி கட்டுக்குள் தான் இருக்கிறது. ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது அதுவும் சரிசெய்யப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழு கோயம்புத்தூர் செல்ல உள்ளது. கோயம்புத்தூரில் இருந்து தேவைப்படும் இடங்களுக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள்.