விஜய் பட நடிகையின் மாஸ்டர் பிளான் காலி ! கோபத்தில் டுவீட்

sinoj| Last Modified செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (16:36 IST)
 

நடிகர் விஜய் மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.  இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இந்த வருடத்தில் இப்படம் மிகுந்த எதிர்ப்பார்வை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் கோடை காலவிடுமுறையைக் குறிவைத்து வெளிவருவதாக இருந்த நிலையில், கொரோனா கால ஊரடங்கால் அதன் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாளவிகா மோகனுக்கு விஜய் ரசிகர்கள் காமன் டிபி வெளியிட்டு டிரெண்டிங் செய்துள்ளனர்.

இதுகுறித்து மாளவிகா மோகனன், இந்தப் பிறந்தநாளை மாஸ்டர் டீமுடன் நான் கொண்டாட நினைத்திருந்தேன். ஆனால் ஸ்டுபிட் கோவிட் என தனது டுவிட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

அதனால் இந்த வருடம் வெளியாகியிருக்க வேண்டிய மாஸ்டர் படம்  ரிலீஸ் தள்ளிப்போனதால அவரது பிறந்தநாள் கொண்டாட்டமும் இல்லாமல் போனதாக தெரிகிறது.இதில் மேலும் படிக்கவும் :