வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 செப்டம்பர் 2018 (16:13 IST)

குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிய நடிகை நிலானி? - வெளியான வீடியோ

தற்கொலை செய்து கொண்ட நடிகை நிலானியின் காதலர், அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். நிலானி, காந்தி லலித்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். மயிலாப்பூரில் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் நிலானி பங்கேற்று இருந்தார். அப்போது அங்கு வந்த அவருடைய காதலர் காந்தி லலித்குமார், நிலானியிடம் திருமணம் குறித்து பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறில் ஈடுபட்டதாக செய்தி வெளியானது.
 
இதையடுத்து நடிகை நிலானி, மயிலாப்பூர் போலீஸிடம், காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தகராறு செய்வதாக புகார் அளித்தார். அதன்பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

 
இதற்கிடையில் நடிகை நிலானியிடம் தகராறில் ஈடுபட்ட அவரது காதலன் காந்தி லலித்குமார், நேற்று சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். 
 
இந்நிலையில், நிலானியும், காந்தி லலித்குமாரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், காதலி நிலானி பற்றி உருக்கமாக பேசும் காந்தி, எங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. நிலானி எனக்கு இன்னொரு தாய். அவள் எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம் என உருக்கமாக பேசும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 
 
அந்த வீடியோவில், ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என காந்தி கூறியுள்ளார். ஆனால், திருமணம் செய்து கொள்ள தன்னை அவர் வற்புறுத்தினார் என்றே நிலானி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
காதலனுடன் குடும்பம் நடத்திவிட்டு நிலானி அவரை விட்டு பிரிந்திருக்கலாம். அதனால் விரக்தி அடைந்த காந்தி தற்கொலை செய்திருக்கலாம் எனவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.