1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 10 செப்டம்பர் 2018 (15:19 IST)

பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த பிக்பாஸ் முதல் சீசன் பிரபலங்கள்; என்ன ஆகுமோ?

பிக்பாஸ் 2 தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. பலரும் எலிமினேட் ஆக பிக்பாஸ் வீட்டில் தற்போது 7 போட்டியாளர்களே உள்ளனர். 
இதில் பிக்பாஸ் 2 சீசனில் விஜயலட்சுமி மட்டுமே நடுவில் வந்தார். அதை தொடர்ந்து யாருமே வரவில்லை. தற்போது வந்துள்ள ப்ரோமோ வீடியோவில்  பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களான காயத்ரி, ஆர்த்தி, சினேகன், வையாபுரி, சுஜா வருணி என பலரும் மீண்டும் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். இவர்களின் வருகை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் அல்லாமல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.
 
தற்போது வந்துள்ள ப்ரோமொ வீடியோவில், உள்ளே வரும் பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஆர்த்தி ஐஸ்வர்யாவிடம் தமிழ் நாட்டின் மருமகளே என்று  கூறுகிறார். அதற்கு ஐஸ்வர்யா பிக்பாஸ் வீட்டின் மருமகளே என்கிறார். இந்நிலையில் இவர்கள் ஏதும் ப்ரோமோஷனுக்கு வந்துள்ளார்களா? இல்லை அவர்கள் மீண்டும் வீட்டிற்குள் தங்குகின்றார்களா? என்று தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்.