வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (07:37 IST)

'ஹிஸ்புத் தஹீரிர்' அமைப்பு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு.. என்.ஐ.ஏ அதிரடி..!

NIA1
உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட 'ஹிஸ்புத் தஹீரிர்' அமைப்பு தொடர்பாக என்.ஐ.ஏ மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் 'ஹிஸ்புத் தஹீரிர்' அமைப்புக்கு ஆட்கள் சேர்த்ததாக உ.பா சட்டத்தில் 6 பேரை  சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். ஹிஸ்புத் தஹீரிர்' அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் கடந்த ஜூன் மாதம் 30 ம் தேதி 'ஹிஸ்புத் தஹீரிர்' அமைப்பு தொடர்பாக தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான் இருவரை என்.ஐ.ஏ கைது செய்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை செய்து வருவதாகவும் குறிப்பாக தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ சோதனை செய்து வருவதாகவும் ராமலிங்கம் கொலை வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் ஐந்து நபர்களை தேடப்படும் குற்றவாளியாக என்.ஐ.ஏ சமீபத்தில் அறிவித்த நிலையில் தற்போது தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva