புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (07:08 IST)

5 வருடம் வயநாடு எம்பியாக இருந்த ராகுல் காந்தி செய்தது என்ன? பாஜக பிரமுகர் கேள்வி..!

வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 276 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் பாஜக பிரமுகர் எஸ்ஆர் சேகர் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் கடந்த ஐந்து வருடங்களாக எம்பியாக இருந்த ராகுல் காந்தி வயநாடு பகுதிக்கு செய்தது என்ன என்றும் நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்க அவர் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றும் கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

மோசமான வானிலை காரணமாக, விமானம் தரையிறங்குவதில் சிக்கல் உள்ளதால், பயணம் ரத்து. மன்னர் குடும்பம் மழை இல்லாத பகுதிக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து தரை வழியாக வயநாட்டிற்கு செல்லலாமே? நேற்று அனுராக் தாகூர் கொடுத்த பதிலடியில் உடம்பு முழுக்க உள் காயம் போல

ட்ராமா கிங் வயநாட்டில் ஓட்டுக்காக பொய் வாக்குறுதிகளை வழங்கி வெற்றி பெறுவார்.
அந்த ஊர் மக்கள் துயரத்தில் உள்ளபோது நீலிக்கண்ணீர் வடித்து ஊரை ஏமாற்றுவார்.  5 வருடம் வயநாடு பாராளுமன்ற உறுப்பினராக அவர் செய்தது என்ன?

பாவம் வயநாடு.... அவர்கள் தலைவிதி ராகுல் காந்திக்கு  ஓட்டு போட்டது. வாய் கிழிய வாயிலே வடை சுடுகிறாரே! இவரையெல்லாம் தலைவர் என்று கொண்டாட ஒரு கூட்டம்.  இதே போன்ற பிரச்னை வாரணாசியில் ஏற்பட்டு அங்கே பிரதமர் மோடி போக முடியாமல் இருந்தால் கிழி கிழின்னு கிழிச்சிருப்பாரே.  அவருக்கு வந்தால் ரத்தம்,  அடுத்தவருக்கு வந்தால் தக்காளி சட்னியா?

Edited by Siva