1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 10 பிப்ரவரி 2024 (13:59 IST)

மதுரையில் 4 மணி நேரம் NIA அதிகாரிகள் விசாரணை.! செல்போன், சிம்கார்டு, புத்தகம் பறிமுதல்..!!

NIA Officers
மதுரையில்  வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவரிடம் NIA அதிகாரிகள் சுமார் 4 நேரம் விசாரணை  நடத்திய நிலையில்,  செல்போன், சிம்கார்டு, மற்றும் புத்தகம் ஒன்றை கைப்பற்றி சென்றனர்.
 
மதுரை மாநகர் ஹாஜிமார் தெரு பகுதியில் உள்ள சாமியார் சந்து பகுதியில் வசித்து வரும் வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவரான முகம்மது அப்துல் அஜிம் என்பவரது வீட்டிற்கு NIA அதிகாரிகள் இன்று அதிகாலை 6 மணிக்கு விசாரணை நடத்துவதற்காக வருகை தந்தனர். 
 
அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் காலை 7.30 மணிக்கு மேல் ஹாஜிமார்தெரு சாவடி எதிரேயுள்ள முகம்மது அப்துல் அஜிம் அவரின் சகோதரரின் வீட்டில் இருந்த நிலையில் NIA அதிகாரிகள் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
 
சுமார் 4  மணி நேரத்திற்கு மேலாக  முகம்மது அப்துல் அஜிமிடம் விசாரணை செய்து புறப்பட்டுசென்றனர். அவரிடம் முந்தைய வழக்குகள் தொடர்பாகவும்,  மற்றும் சமூகவலைதளங்களில் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்திய பின்னர் செல்போன், சிம்கார்டுகள் மற்றும் புத்தகம் ஒன்றையும் பறிமுதல் செய்து சென்றனர்.
 
NIA அதிகாரிகள் சோதனை நடத்தியபோது திடீர்நகர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  NIA அதிகாரிகள் விசாரணை நடத்திய முகம்மது அப்துல் அஜிம் என்பவரது மீது விளக்குத்தூண் காவல்நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பாபர் மசூதி தொடர்பாக சுவரொட்டி ஒட்டியது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Nia Riact
இஸ்லாமிய இளைஞர்களுக்கு NIA தொந்தரவு:
 
NIA அதிகாரிகளின் விசாரணை குறித்து பேசிய  முஸ்லிம் ஜமாத் செயலாளர் அயாஸ், NIA அதிகாரிகள் தேர்தல் நேரம் என்பதால், சமூக பணிகளில் ஈடுபடும் இளைஞர்களை அலைக்கழித்து சோதனை நடத்துகின்றனர் என குற்றம் சாட்டினர்.

 
NIA இஸ்லாமிய இளைஞர்களுக்கு அதிகளவிற்கு தொந்தரவு அளிக்கிறது என்றும் இது வன்மையாக கண்டிக்கதக்கது என்றும் அயாஸ் தெரிவித்துள்ளார்.