செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2024 (14:48 IST)

மோசடி வழக்கு; ’லிங்கா’ பட நடிகையின் சொத்தை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவு!

சூப்பர் ஸ்டார் யார் ரஜினிகாந்த் நடித்த ’லிங்கா’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த சோனாக்ஷி சின்ஹா மற்றும் அவரது மேலாளர் உள்பட நான்கு பேர் சொத்தை பறிமுதல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக கூறி 25 லட்சம் சம்பளம் வாங்கி இருக்கிறார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளாததை அடுத்து கொடுத்த பணம் திருப்பி கேட்கப்பட்டுள்ளது. 
 
அந்த பணத்தை சோனாக்ஷி சின்ஹா திருப்பி கொடுக்காததால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் சோனாக்ஷி சின்ஹா மற்றும் அவரது மேலாளர் உள்பட நான்கு பேரும் ஆஜராகவில்லை. 
 
சோனாக்ஷி சின்ஹா மட்டும் ஆஜராக விலக்கு என்ற தடை உத்தரவு பெற்றிருக்கும் நிலையில் மற்ற மூவரும் உடனடியாக ஆஜராக வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சொத்துக்கள் பறிமுதல் செய்யும் உத்தரவு சோனாக்ஷி சின்ஹாவுக்கு பொருந்துமா என்பது தெரியவில்லை என்றாலும் அவரது தரப்பினர் கடும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran