வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2024 (18:17 IST)

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது மூச்சு விட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இறந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திய நிலையில், பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர் ரம்யாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
இதுகுறித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, மரத்துரை வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகேசன் அவர்களின் மனைவி சிவரஞ்சனி வயது 28/F அவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்தது தொடர்பாக குழந்தையின் தந்தை, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனையின் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். 
 
இது குறித்து இணை இயக்குநர் நலப்பணிகள் அவர்கள் குழந்தையின் தந்தை மற்றும் உறவினர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சிவரஞ்சனி அவர்களுக்கு பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர் மருரம்யா தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார்.
 
 
Edited by Mahendran