செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 21 டிசம்பர் 2020 (18:45 IST)

வரும் 31 மற்றும் 1 ஆம் தேதி….புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை – தமிழக அரசு

வரும் 31 மற்றும் 1  ஆம் தேதி தமிழகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த வருடம் இறுதி நாளான டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவிலும் அடுத்த நாள் புத்தாண்டு நாளான 1 ஆம் தேதியும், கடற்கரை, சாலைகளில், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள்,தங்கும் விடுதிகளில்  புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு 2021 புத்தாண்டுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.