வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 7 ஏப்ரல் 2018 (12:27 IST)

தமிழக அரசு பள்ளிகளில் சீருடை மாற்றம்: அசத்தலான வண்ணத்தில் இருப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சி

தனியார் பள்ளிகள் வகைவகையான வண்ணங்களில் சீருடைகளை மாணவ, மாணவிகளை அணிந்து வரும் நிலையில் அரசு பள்ளிகளில் ஆதிகாலத்தில் இருந்தே மொக்கையான ஒரே வண்ணத்தில் சீருடை இருந்து வருகிறது. இதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒருவகையான மன அழுத்தமே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் சீருடை மாற்றப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது புதிய சீருடை குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளது.

இதன்படி  9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு, சாம்பல் நிறத்தில் பேன்ட்டும் இளஞ்சிவப்பு நிறத்தில் கோடிட்ட மேல் சட்டையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கருநீல நிற வண்ணத்தில் முழுக்கால் சட்டையும் கருநீல நிற கோடிட்ட மேல் சட்டையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வரும் கல்வியாண்டு முதல் இந்தப் புதிய சீருடை முறை பின்பற்றப்படும். ஆனால் இந்த சீருடைகளை மாணவர்கள் தங்கள் சொந்த செலவில் வாங்கி கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தகக்து.

மேலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் சீருடைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் இந்த மாணவர்களுக்கும் விரைவில் சீருடை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.