1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 2 ஏப்ரல் 2018 (16:10 IST)

காவிரி விவகாரம்: மாணவர்கள் தூக்குப்போட்டு நூதன போராட்டம்

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இருப்பதை கண்டித்து தஞ்சையில் மாணவர்கள் பச்சை துண்டால் தூக்குப்போட்டு நூதன போராட்டம் செய்தனர்
 
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நிலையில், தமிழகத்தின் பல இடங்களிலும் மாணவர்களும், பொதுமக்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதேபோல் திமுக உட்பட பல எதிர்கட்சிகளும் போராட்டங்களை துவக்கியுள்ளன.
 
இந்நிலையில், தஞ்சயை அடுத்த வல்லம் பேருந்து நிலையத்தின் அருகில் தமிழ்நாடு மாணவர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமையில், மாணவர்கள் பச்சை துண்டால் தூக்குப்போட்டு நூதன போராட்டம் செய்தனர். 
 
இந்த போராட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மாணவர்களை பேசி சமாதானப்படுத்தி கூட்டத்தை கலைத்தனர்.