1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (10:24 IST)

நெற்றியில் சந்தனம் வைத்த மாணவிகளை துன்புறுத்தியதாக பள்ளி நிர்வாகம்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் இயங்கி வரும் பல தனியார் பள்ளிகள், மத நோக்கத்திலும், மதங்களை பரப்புவதிலும் ஈடுபட்டு வருவதாகவும், பிற மதங்களை சார்ந்த மாணவ, மாணவிகளை துன்புறுத்தி வருவதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் சமீபத்தில் எழுந்து வருகின்றது.

இந்த நிலையில் ஆரணியை அடுத்த தேவிகாபுரம் என்ற பகுதியில் இயங்கி வரும் குளினி மெட்ரிக் கிருஸ்துவ பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலர் இன்று காலை பள்ளிக்கு வரும்போது நெற்றியில் சந்தனம் வைத்து கொண்டு வந்தனர். அந்த மாணவிகளை பள்ளி நிர்வாகம் அடித்து துன்புறுத்தியதாக திடுக்கிடும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இதனையடுத்து சந்தனம் வைத்த மாணவிகளை துன்புறுத்திய பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் மற்றும், அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.