தமிழகத்தில் இன்று முதல் புதிய தளர்வுகள்
தமிழகத்தில் கொரோனா காரணமாக இருந்த கட்டுபாடுகள் இன்று முதல் பல்வேறு தளர்வுகளுடன் அமலுக்கு வந்துள்ளன. அவை பின்வருமாறு...
1. திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் விளையாட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி.
2. கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள் நிலையான வழிகாட்டி நடைமுறையை பின்பற்றி நடத்த அனுமதி.
3. அனைத்து வகை தனித்து இயங்கும் மதுக்கூடங்களும் செயல்பட அனுமதி.
4. அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம்,பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் போன்ற அரசு பயிற்சி நிலையங்கள் 100% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி.
5. தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள் கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி.
6. திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வு பணிக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும்.