Daily Horoscope
✕

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க புதிய லிங்க்!

Written By Sugapriya Prakash
Updated: புதன், 7 டிசம்பர் 2022 (12:10 IST)
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அப்டேட் செய்யப்பட்ட புதிய லிங்கை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.


மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31 ஆம் தேதி வரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் இருந்தாலும் பொதுமக்கள் தற்போது ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனர்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க இணையதளத்திலும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதோடு மின் கட்டண வசூல் மையங்களில் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் இணைப்புக்காக மின்வாரிய இணையதளத்தை பயனர்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால் குறிப்பிட்ட இணைய பக்கத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதாக புகார் எழுந்தது.

இதனைத்தொடர்ந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அப்டேட் செய்யப்பட்ட புதிய லிங்கை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி  Bit.ly/linkyouraadhar என்ற இணையதளத்தில் ஆதாரை இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

கூட்டணி கட்சி இல்லாமல் திமுக ஓட்டு வாங்கியதா?!.. திருமாவளவன் கருத்து!....

இந்த முட்டாள்களுக்கு இது தெரியாதா?.. திமுகவை திட்டிய ஆதவ் அர்ஜுனா!...

நாம் தமிழர் ஓட்டு இன்னும் எண்ணல!.. சீமான் NGO நடத்தலாம்!.. முஸ்தபா எம்.எல்.ஏ நக்கல்!..

யார் யாருக்கோ நோபல் பரிசு கொடுக்குறீங்க!.. எனக்கு இல்லையா?!.. டிரம்ப் கோபம்!...

வைகோ மட்டும் பேசுகிறார்!.. கூட்டணி கட்சி தலைவர்கள் மீது அப்செட்டில் விஜய்!..

அடுத்த கட்டுரையில்
Show comments