செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 மே 2021 (11:37 IST)

அரபிக் கடல் முடிஞ்சது.. அடுத்து வங்க கடல்; புதிய காற்றழுத்த தாழ்வு நிலை? – வானிலை ஆய்வு மையம் தகவல்!

அரபிக்கடலில் டவ்தே புயல் உருவாகி பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் அடுத்து வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி டவ்தே புயலாக மாறி குஜராத் அருகே கரையை கடந்தது. இதனால் மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் பல பாதிப்புகளை சந்தித்தது.

இந்நிலையில் தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 23ம் தேதி அந்தமான் அருகே தெற்கு கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையானது அடுத்த 5 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.