”இது ராவணன் பூமி” இல்ல “இது ராமர் பூமி”! – சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் மோதல்!
இன்று அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் ராமரா? ராவணனா? என நெட்டிசன்களிடையேயேன மோதல் ட்ரெண்டாகியுள்ளது.
நீண்ட ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்து வந்த அயோத்தி விவகராம் முற்று பெற்று ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கா பணிகள் கோலகலமாய் தொடங்கியுள்ளன. இன்று நடைபெறும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் ட்விட்டரில் பலர் அதை கொண்டாடும் விதமாக #ஜெய்ஸ்ரீராம் என்ற ஹேஷ்டேகுகளை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் ராமரை விடவும் ராவணன் மீது ஈர்ப்பு உள்ள சிலர் அந்த ட்ரெண்டிங்கிற்கு எதிராக ராவணனை ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர். அதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இடையே ராமர் – ராவணன் ஆதரவு பதிவுகள் அதிகரித்துள்ளன. ராவண ரசிகர்கள் பலர் #TamilsPrideRavanan #LandOfRavanan என்ற ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.