வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 15 ஏப்ரல் 2024 (14:16 IST)

இந்தியாவில் நீட் தேர்வை நடத்துவது அமெரிக்கா தான்: நாம் தமிழர் கட்சியின் சீமான்

Seeman
இந்தியாவில் நீட் தேர்வை நடத்துவது அமெரிக்கா தான் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.

போலி மருத்துவர்களை உருவாக்கவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்றும், காங்கிரஸ் கூட்டணி அரசு தான் ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்தது என்றும், சீமான் மேலும் கூறினார்.

5 மாநில தேர்தல் நடந்த போது 200 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை பாஜக அரசு குறைத்தது என்று கூறிய சீமான், "இங்கு கட்சி அரசியலும் தேர்தல் அரசியலும் தான் இருக்கிறது மக்கள் அரசியல் இல்லை என்றும், ஆட்டை பலி கொடுப்பதுக்கு முன் இரை கொடுப்பது போல விலையை குறைக்கிறார்கள் என்றும்  சீமான் குற்றஞ்சாட்டினார்.

முன்னதாக நாம் தமிழர் கட்சி சார்பாக மைக் சின்னத்தில் போட்டியிடும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் இரா.ஜான்சி ராணி அவர்களை ஆதரித்து   சீமான் அவர்கள் சிதம்பரம் மேலவீதியில் வாகன பரப்புரை மேற்கொண்டார்.

மேலும்  மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள் அவர்களை ஆதரித்தும் சீமான் கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோயில் அருகில் வாகனப் பரப்புரை மேற்கொண்டார்.

Edited by Siva