திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 ஜூன் 2023 (13:17 IST)

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நாங்களும் கூட்டணிக்கு அழைப்போம்: நயினார் நாகேந்திரன்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை நாங்களும் கூட்டணிக்கு அழைப்போம் என பாரதிய ஜனதா கட்சியின் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார். 
 
நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரை தங்கள் கூட்டணியில் இணைக்க அனைத்து எதிர்கட்சிகளும் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 
குறிப்பாக திமுக காங்கிரஸ் கூட்டணியில் விஜய் கட்சியை இணைக்க அழைப்பு விடுவோம் என காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது விஜய்யை நிச்சயமாக கூட்டணிக்கு அழைப்போம் என நெல்லையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார். 
 
ஆனால் விஜய் எந்த கூட்டணியிலும் இணைய மாட்டார் என்றும் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறி வருகின்றன.
 
Edited by Mahendran