1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 ஜூன் 2023 (09:39 IST)

கோத்து விட்ராதீங்கய்யா..! விஜய் பிறந்தநாளில் குதர்க்கமான போஸ்டர்!

Vijay Birthday poster
இன்று நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.



இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பல பகுதிகளிலும் கொண்டாடி வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் ரத்த தான முகாம், அன்னதானம் உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.

விஜய் பிறந்தநாள் என்றாலே ரசிகர்கள் விதவிதமாக போஸ்டர் ஒட்டுவது வாடிக்கை. அந்த வகையில் இந்த பிறந்தநாளுக்கு விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது. அதில் “அமலாக்கத்துறை வியக்கும் தமிழனே.. ஆண்டவர் – ஆழ்பவர் விரும்பும் தமிழின முதல்வனே!” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

சமீபத்தில் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்திய நிலையில் அமலாக்கத்துறை பெயரை பயன்படுத்தி ரசிகர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் வைரலாகியுள்ளது.

Edit by Prasanth.K